Sunday, May 3, 2009

இந்து மத பண்டிகைகள் - பகுதி-1

சொர்க்கவாசல் மகிமை!

மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம்முதலிய ஊர்களுக்குப் பணச்செலவு செய்து கொண்டு போவதும், பொய்யையும்புளுகையும் காவடிக் கதையாய்ச் சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும், கோழியும், மீனும் உயிர் பெற்று விட்டது என்பதும், மண் சர்க்கரை ஆகிவிட்டதுஎன்பதும், வெட்டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர் பெற்று விட்டது என்பதும்இதுபோல் இன்னும் பல பொய்களை வெட்கமில்லாமல், சொல்லுவதும், அழுக்குக் குட்டைகளில் குளித்தும், குடித்தும் பஞ்சாமிர்தம் எனும் அசிங்கத்தைஉண்டும், அதனால் காலரா போன்ற கொடிய நோய்க்கு இரையாவதும் நாம்கண்டதுதானே! அசிங்கம், ஆபாசம், அறியாமை இவைதானே நமதுபண்டிகைகளாக இருந்து வருகின்றன?

சீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிறார்களே, அதன்தாத்பரியத்தைக் கேளுங்கள் :

"நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோயிலின் பொன் விக்கிரகத்தைத் திருடிவந்து, அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்றநாமக்காரன் சீரங்கம் கோயிலின் மதில்களைக் கட்டினான். ஆனால், அக்கோயிலின் மதில்களையும், கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகட்கோஅந்தக் கோயிலின் சின்னத்தையே - அதாவது நாமத்தையே சாத்திவிட்டான். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்றுகூறி, காவிரி தீரத்தில் கொண்டுபோய்க் கவிழ்த்துக் கொன்றுவிட்டான் - ஓடக்காரன் துணையோடு!

அவர்களை ஆற்றுவெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக்கொள்ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் பார்வானத்துறை' (பார் வானம் - சுடுகாடு, பார்வணம் - சிரார்த்தம் செய்யும் இடம்) என்றும் பெயரிடஆண்டவனிடம் இறைஞ்ச, அவ்வாறே அளிக்கப்பட்டு அன்று

கொல்லப்பட்டவர்க்கெல்லாம் முக்தி யும் அளிக்கப்பட்டதாம்! (திருமங்கைஆழ்வார் வைபவம் என்ற நூல் ஆதாரப்படி)

சீரங்கம் வைகுண்ட ஏகாதசியின் போது திறக்கப்படுகின்றதேசொர்க்கவாசல் அது எங்கே செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார்கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப்பார்வானத்துறைக்கு! சொர்க்கவாசல் மகிமை புரிகிறதா? '

சிவராத்திரி!

சிவராத்திரி என்பது ஒரு பட்டினித் துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம்வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப் போல், சைவர்கள் என்றுகருதக்கூடியவர்கள் சிவன் ராத்திரியும் (கைலாச யாத்திரை, சமாதி) பட்டினிவிரதவிழா. தை, மாசி போன்ற காலங்களில் குளிர் நிறைந்துள்ளபடியால், உடல்அங்கங்கள் இயக்கம் தடுமாறும்; உண்ணும் உணவு போன்றவை சரியானபடிஜீரணம் ஆகாமல் இருக்கும்; வயிற்று இரைச்சல் போன்ற வயிற்றுக்கோளாறுஉண்டாகும்.

ஆனால், இந்தச் சிவராத்திரி விரத மகிமைப்பற்றிக் கூறப்படும் புராணக்கதைகளோ அறிவுக்கும், இயற்கைக்கும், மக்கள் நடப்பு - பண்பாடுகளுக்கும்பொருந்தாதவை ஆகும். இந்த விரதம் பற்றிக் கூறப்படும் புராணக் கதையைப்பாருங்கள்!

முன்னொரு சமயம் ஊரும் பேரும் இல்லாத ஒரு வேடன் வேட்டைக்குச்சென்றானாம். அவனுக்குக் காலை முதல் இரவு வரை காட்டில் அலைந்தும் எந்தவிலங்கும் அவனுக்குத் தென்படவில்லையாம். இரவு நெருங்கும் நேரமானதால்விலங்குகள் நடமாட்டம் ஆரம்பித்தன. ஒரு புலி இந்த வேடனைக் கண்டுவிட்டது. இவனைப் பின் தொடர்ந்து வந்தபடியால், அவன் உயிர் தப்ப ஓடி, ஒரு பெரியவில்வமரத்தின் மேல் ஏறிக்கொண்டானாம். அப்போது மழையும் பெய்தது. அந்தப்புலியும் விடாமல் துரத்தி வந்து அவன் ஏறியிருந்த மரத்தின் கீழ் தங்கல் போட்டது. புலியும் அவன் இறங்குகிறானா என்று பார்த்துகொண்டே கீழே படுத்து இருந்தது.

வேடன் பசி மயக்கத்தில் அதிகக்களைப்பு அடைந்து, வீடு செல்லஎண்ணியபடியால், அந்தப் புலியை விரட்ட, அந்த வில்வமர இலைகளைக்கொத்து கொத்தாய் பறித்து அந்தப் புலியின் மேல் வீசினான். மழையின்காரணத்தால் அந்த இலைகளில் உள்ள ஈரப்பசையால் புலிக்குப் பக்கத்தில் உள்ளகுத்துக்கல் மீது அந்த இலைகள் விழுந்தன. அது ஒரு சிவலிங்கமாம்; அன்று இரவுவேட்டை கிடைக்காததால் அந்த வேடன் பகல் முழுதும் பட்டினி.

(வேடர்கள் பொதுவாக காலையில் பழைய உணவு சாப்பிட்டு விட்டுவேட்டைக்கு வந்து வேட்டையாடிய விலங்கைக் கொண்டு சென்று, இரவுசமைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாதலால், பகல் முழுதும் பட்டினி என்பதுசாதாரணம் தான்)

அவன் மாலை மழையில் நனைந்து குளித்தது போல் ஆயிற்றாம்; அவன் புலியைவிரட்ட மரத்திலிருந்து கீழே போட்ட வில்வ இலைகள் மழையின் நீரால்நனைந்து, அவனை அறியாமல், அவன் அறியாத லிங்கத்தின் மீது விழுந்தனவாம். எனவேதான் அன்று சிவராத்திரி, இரவில் லிங்கபூசை செய்தது போல் ஆயிற்றாம். அவன் இவ்விதம் செய்தது சிவனைக் கும்பிடவேண்டும் என்ற எண்ணமில்லாமல்போனாலும், சந்தர்ப்ப வசத்தால் பகல் முழுதும் பட்டினி கிடந்தது, சிவராத்திரி - பகல் உபவாசம் இருந்தது போல் ஆயிற்றாம். புலியை விரட்ட, மழைத்தண்ணீரால் நனைந்த வில்வ இலைகள் லிங்கத்தின் மீது தற்செயலாய்விழுந்தபடியால், அதைக் குளிப்பாட்டி, வில்வ இலைகளால் அர்ச்சனைசெய்ததுபோல் ஆயிற்றாம். இதனால் அவன் வான் உலகை அடைந்தானாம். அடுத்த கதை -

ஒரு பார்ப்பன வாலிபனைப் பற்றியது. இவன் சுத்த அயோக்கியனும்ஒழுக்கக்கேடனும் ஆவானாம். இதனால் ஊரைவிட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன்இரவு வந்ததும் ஒரு சிவன் கோயிலை அடைந்தானாம். அப்போது அந்த கோயில்அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுவரன் சிலை முன் வைத்து விட்டுவெளியில் சென்று இருந்தான். இந்தப் பார்ப்பன வாலிபன் யாரும் இல்லாதசமயம் அங்கு சென்றபடியால் அவற்றை எடுத்து உண்ண ஆசைப்பட்டு, என்னென்ன பலகாரங்கள் இருக்கின்றன என்பது தெரியாதபடியால், இருண்டவெளிச்சமாக இருந்ததைக் கருதி, கோயிலில் இருந்த விளக்கின் திரியைதூண்டிவிட்டானாம். அப்போது திரும்பி வந்த அர்ச்சகன் பார்ப்பன இளைஞன்பலகாரங்களை மூட்டை கட்டுவதைக் கண்டு. ஆத்திரத்தில் அவனை அடித்துக்கொன்றான். அன்று மகாசிவராத்திரியாம்.

ஒழுக்கங்கெட்ட அந்தப்பார்ப்பான், காலை முதல் இரவு வரை பட்டினி இருந்ததுமகாசிவராத்திரி பகல் உபவாசம் ஆனதாம். திருட எண்ணி, பிரசாதங்களைபார்ப்பதற்கு விளக்கு வெளிச்சத்தைத் தூண்டியது சிவராத்திரியில் ஈசுவரலிங்கசிலைக்கு தீபாராதனை செய்தது போலவும் பிரசாத நிவேதனம் செய்ததுபோலவும் ஆனதாம். இதனால் பார்ப்பன பூசாரியால் கொல்லப்பட்டதும் நேராகசிவலோகம் சென்றானாம்.

சிவராத்திரியில் மனிதக்கொலை; அவன் கொலை செய்தது எந்தப்புண்ணியத்தைச் சேர்ந்ததோ? கொலை செய்த அர்ச்சகனுக்கு எந்த லோகம்அளிப்பதோ? என்பது எல்லாம் அதில் கூறப்படவில்லை. மனிதனுக்குப் பிறப்புஅடுத்து இறப்பு வருவது இயற்கைத்தத்துவம் என்பது உண்மை.

உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இயல்பாய் தெரிந்தஉண்மையாகும். ஆனால், இந்த சிவராத்திரிகள் விரதங்களின் முக்கியஅடிப்படை, பகலை அடுத்து இரவு வருவதுபோல், மனிதருக்குப் பிறப்பை அடுத்துஇறப்பு வருவது என்பதுதானாம். இதைத் தெரிந்து கொள்ள பூசையும் விரதமும்வேண்டுமா? என்று தான் நாம் கேட்கின்றோம்.

இந்த பாழும் அர்த்தமற்ற - பொய்யான - ஒரு காசுக்கும் உதவாத, நமக்குஇழிவையும் அவமானத்தையும் தருவதான பண்டிகைகளும், உற்சவத்திற்கும், பூசைக்கும், சடங்குக்குமாகப் பொருளையும், பணத்தையும் விரயப்படுத்துவதுமக்களின் அறியாமையும், சுயநலக்காரர்களின் சூழ்ச்சியும், புரோகிதர்களின்ஆதிக்கமும், தந்திரமுமே ஆகும். இவைகளை உடனடியாக ஒழிக்கவேண்டும்.

ஸ்ரீ ராம நவமி!

இருபது லட்ச வருடங்களுக்கு முன் ராமன், அயோத்தி இருந்தனவா? இந்த நாள் - கோள் இருந்தனவா? ராவணன் இருந்தானா?

பார்ப்பனர்கள் ராமநவமி என்று சொல்லி கொண்டு வருடத்திற்கு ஒரு நாள், போலி நாளை மக்களிடம் விளம்பரப்படுத்திக் கொண்டு ஆண்டுக்கு ஒரு முறைகொண்டாட்டம் நடத்துகின்றார்கள்.

இதை அரசாங்கம் அனுமதிப்பதுடன் அதற்காகச் சில இடங்களில் ஒரு நாள்லீவும் கொடுக்கிறார்கள்.

ராமன் பிறந்தநாள் என்று சொல்லப்படுவது இன்றைக்கு 20- லட்சம் (20,00,000) ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த 20- லட்ச வருடத்தில் உலகத்தில் உள்ளதுஎல்லாம் நாசமடைவதும் - உலகமே மாற்றமடைவதும் போன்ற காரியங்கள்நடந்து இருக்கவேண்டும். அப்போது மனித சமுதாயம் - மனிதன் - காடுமேடு - உலக பூகோளம் - மலை - சமுத்திரம் போன்ற யாவும் அழிவும் - மாற்றமும்அடைந்து விடும். இது யாவரும் அறிந்ததும் - புராணக்கூற்றும் - சரித்திரஉண்மையும் ஆகும்.

இப்படிப்பட்ட நிலையில் 20- லட்சம் ஆண்டுகளுக்கு முன் அயோத்தி என்றஊரும், தசரதன் என்ற ஒரு அரசனும், அவனுக்கு அனேக பெண்டாட்டிகளும்இருந்தனர்; அவனுக்கு ராமன் என்று ஒரு பிள்ளை பிறந்தான். அதற்கு வருடம் - மாதம் - தேதி - கிழமை நாள் - கோள் - இன்ன இன்னது என்பதும் அவை மாத்திரம்அல்லாமல் அந்த 20- லட்சம் ஆண்டுகளுக்கு முன் திராவிட நாடு, பாண்டிய நாடு - இலங்கை நாடு என்பவை இருந்தன என்பதும் எப்படி உண்மையாக இருக்கமுடியும்?

20- லட்சம் வருடங்களாகக் கோள்கள் மாறாமல் மறையாமல் இருக்க முடியுமா? பார்ப்பனர்கள் தங்கள் சுகவாழ்வுக்காக எதையும் சொல்லுவார்கள் - செய்வார்கள்என்று இருந்தாலும் பார்ப்பனர் அல்லாத மற்ற மக்கள் - அறிவாளிகள், பூகோளம்விஞ்ஞானம் படித்த சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் இவற்றை எப்படி நம்புகிறார்கள்என்பது நமக்குப் புரியவில்லை.

இந்தக் கற்பனைப் புளுகை நமது மாணவர்கள் எப்படி நம்புகிறார்கள் என்பதும்அதிசயமாக உள்ளது.

வடநாட்டில் ராவணனைக் கொளுத்தினார்கள் என்றால், தென்னாட்டில் ஏன்ராமனைக் கொளுத்தக் கூடாது? ஒரு பொய்யான கற்பனைக் கதையில் இருந்துதென்னாட்டு மக்களை அவமானமும், இழிவுபடுத்தலுமான காரியத்தைபார்ப்பனரும், வடநாட்டாரும் செய்தால் அதற்கு அவர்களுக்கு உரிமைஇருந்தால், அதற்குப் பதிலாக அவர்களுக்கு புத்தி வரும்படியான காரியத்தை நாம்ஏன் செய்யக்கூடாது?

ஆகவே, மாணவர்கள், இளைஞர்கள், திராவிடர்கழகத் தோழர்கள், கட்டாயமாகச்சிந்தித்து, நல்லபடி யோசித்து, எனக்காக என்றே அல்லாமல், தங்களுக்குச் சரிஎன்றும், அவசியம் என்றும் தோன்றினால், இராவணன் படத்தை உருவத்தைக்கொளுத்தினதற்குப் பதில் என்று இராமன் படத்தைக் கொளுத்த வேண்டும் என்றுதெரிவித்துக் கொள்கிறேன்.

நமது (பார்ப்பனரல்லாத) மக்கள் ஆதரவு, பார்ப்பனர்களுக்கு இருப்பதால்இதுபோன்ற (பார்ப்பனப்) பிரச்சாரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இந்தப்படியான பித்தலாட்டங்களில் ஏமாறாமலும், நம்மை இழிவுபடுத்தும்இதுபோன்ற காரியங்களைத் தடுக்கவும் தான் நாம் ராமன் படத்தைக்கொளுத்துவது போன்ற செயல்களில் இறங்க வேண்டும்.

தந்தை பெரியார்

No comments:

Post a Comment