Sunday, April 5, 2009

இது ஒரு புதிய பாதை

அனைவருக்கும் வணக்கம் , இந்த வலைபகுதி உங்கள் சிந்தனையை தூண்டுவதற்காக எங்கள் நண்பர்கள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் வெளியிடப்படும் கருத்துக்களை சிந்தித்து ஏற்று கொள்ளுங்கள். அதன் மூலம் அனைவரும் பயன் பெறுவீர்கள் என நம்புகிறோம்.

-தமிழர்கள்

5 comments:

  1. Very good job. Keep on doing this. This is need for the current situation.

    ReplyDelete
  2. நன்றி . கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன.

    ReplyDelete
  3. "இது ஒரு புதிய பாதை"
    உங்கள் தலைப்பு யாருடைய பாதையை குறிக்கிறது? உங்கள் பாதையையா? அல்லது நாத்திக பாதையையா? உங்களுக்கு நாத்திகம் புதிதாக இருக்கலாம். ஆனால் நம் சமுதாயத்திற்கு மிக பழையது. திராவிடம் பேசும் உங்களில் எத்தனை பேருக்கு இராமாயண புராணத்தில் நாத்திகம் பேசப்பட்டிருப்பது தெரியும்? இராமாயணம் எழுதப்பட்ட (நடந்த என்று நான் சொல்லவில்லை) காலம் மிக பழையது. இதை நீங்கள் ஒத்துக் கொண்டால் முதலில் உங்கள் தலைப்பை மாற்றுங்கள். பிறகு மக்களின் தலை எழுத்தை மாற்றலாம்.

    ReplyDelete
  4. மக்களுக்கு அறிவை புகட்டவேண்டும் என்பதை ஒத்து கொண்டதற்கு நன்றி. பாதை எவ்வளவு பழசாக இருந்தாலும், அதை முதல் முறை கடக்கும் போது அனைவருக்கும் அது புதிய பாதைதான். நாங்கள் பாதையை உருவாக்கவில்லை. இருக்கின்ற பாதைக்கு வழி காட்டுகிறோம் , அவ்வளவுதான். ஆன்மீக பாதை (எங்கு செல்கிறது) என்றே தெரியாமல் பயணிக்கும் மக்களுக்கு , இந்த நாத்திகப் பாதை கண்டிப்பாக பயன் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆக தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பது எங்கள் கருத்து ( புரிந்தவர்களுக்கு)

    நாங்கள் உண்மையை பேசும் போது அது நாத்திகம் ஆகி விடுகிறது. அனைவரும் நிர்வாணமாக உள்ள ஊரில் , கோவணம் கட்டியவன் கோமாளி என்பது போல.

    ReplyDelete
  5. பாதை பழையது பயணம் தான் புதியது என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். அப்படி என்றால் "இது ஒரு புதிய பயணம்" என்பதே சரி...
    வீண்வாதம் செய்ததற்கு மன்னிக்கவும். என்னுடைய இந்த வாதம் தேவையற்றது. தங்கள் பயணம் மேற்கொண்டு தொடர வாழ்த்துக்கள். அவ்வப்போது விமர்சனங்கள் வந்து சேரும்.
    நன்றி...
    --> சின்னா.

    ReplyDelete