Saturday, April 18, 2009

யார் அரக்கன் ? யார் அசுரன்?

அசுரர்களில் கொடிய அசுரன் அந்த காசுரன் என்பவன்.இவன் ஈஸ்வரனை நோக்கி கடும் தவம் புரிந்தான்.மூன்று உலகங்களிலும் தன்னாட்சியின் கீழ் இருக்க வேண்டும் என்பதே அவனது பிரார்த்தனை. அவனது கடும் தவத்திற்கு மனம் இறங்கிய சிவன், அவன் வேண்டுகோளை நிறைவேற்றினார்.

ஆனால், வரம் பெற்ற மமதையில் அந்த காசுரன், அசுரர்களுக்கே உரிய ஆணவத்துடன் தேவர்களை துன்புறுத்த தொடங்கினான். அவன் அல்லல் தாங்காத தேவர்கள் ஈஸ்வரனிடம் சென்று முறையிட்டனர்.தேவர்களின் துன்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சிவன் தன் நெற்றி கண்ணில் இருந்து காலபைரவரை தோற்றுவித்தார். அவரிடம் இருந்து தோன்றிய அஷ்ட (எட்டு) பைரவர்கள்.64 பைரவர்களாக மாறி அந்த காசுரனை அழித்தனர்.

உயிர் பிரியும் நேரத்தில் அந்த காசுரன் பசியால் துடிக்கிறான் . அங்கு விளைந்திருந்த பூசணிக்காயை பறித்து ,அதை உலகமாக நினைத்து சத்தியம் செய்.பசிக்கு தருகிறேன் என்றார் பைரவர். அப்போது அவன், "எந்த பூசை செய்தாலும் எனக்கும் அதில் மரியாதை செய்யப்பட வேண்டும் என்றான். பைரவரும் அவ்வாறே அருளினார். அதனால் தான் இன்றும் கணபதி ஓமம் ,புதுமண புகுவிழா போன்ற பூஜைகளில் அசுரர்களை திருப்தி செய்ய பூசணிக்காய் உடைக்கப்படுகிறது.

தினத்தந்தி -வெள்ளி மலர் (17/04/09)

ஒரு பகுத்தறிவாதியின் கேள்விகள்.

1. இந்த கதை எங்கு நடந்தது? எப்போது நடந்தது? (கிமுவா , கிபியா)

2. ஒரு உலகம், நாம் வாழும் இடம். மீதி இரண்டு உலகம் எங்கே? யார் சென்று வந்து இருகின்றனர்? எந்த வாகனம் உபயோகப்படுத்தப்பட்டது?

3. அசுரன் என்றால் என்ன? அவன் அங்க அடையாளங்கள் என்ன? உலகின் வேறு நாடுகளில் அசுரன் வாழ்ந்ததுண்டா?

4. ஒரு சர்வ சக்தி வாய்ந்த கடவுளுக்கு தன் பக்தனுக்கு என்ன வரம் வேண்டும் என்று தெரியாதா? (சாதாரண பூனைக்கு தெரிகிறது , தன் குட்டிக்கு என்ன வேண்டும் என்று)

5. இந்த வரம் கொடுத்தால் இந்த மாதிரி பிரச்சினை ஏற்படும் என்று கடவுளுக்கு தெரியுமா? தெரியாதா? தெரியாது என்றால் அவன் என்ன அனைத்தும் அறிந்தவன். தெரியும் என்றால் என்ன வெங்காயத்துக்கு கொடுக்க வேண்டும்?

6. ஒரு சாதாரண அரக்கனை தானே அழிக்காமல் , ஏன் 64 பைரவர்களை தோற்று விக்க வேண்டும்? அப்புறம் என்ன சர்வ சக்தி?

என்னை பொறுத்த வரையில் அந்த காலத்தில் அரக்கர்கள் , அசுரர்கள் என சித்தரிக்கப்பட்டவர்கள் கடவுள் மறுப்பு கொண்டவர்களும், தமிழர்களும் தான். தேவர்கள் என கூறி கொண்டவர்கள் பார்பனர்கள். பெரும்பாலும் அனைத்து இதிகாசம், மற்றும் புராணங்களும் , தேவர்கள் அசுரர்கள் தொல்லை தாங்க முடியாமல் இறைவனை வேண்டுவர். உடனே இறைவன் வருவார் அவதாரம் எடுப்பார் , அரகர்களை அழிப்பார் என்பதை மைய கருத்தாக கொண்டே எழுதப் பட்டிருக்கும். இதன் நோக்கம் சமூகத்தில் அவர்களை உயர்ந்தவர்களாக காட்ட ஏற்படுத்தப்பட்ட வழி முறையே ஆகும்.

ராமாயணம்
பிராமண வேடத்தில் வரும் அனுமானின் காலில் ராமன் விழுந்து வணங்குகிறார். அனுமான் பதறி ராமா, நான் உங்கள் பக்தன் நீங்கள் என் காலில் விழுந்து வணங்குகிறீர்களே என்று கேட்க, அவன் கடவுளே ஆனாலும் , பிராமணன் எதிரில் வந்தால் வணங்க வேண்டும் என்கிறார்.
சம்பூகன் என்ற ஒரு சூத்திரன் தவம் செய்யும் போது , பிராமிணர்கள் ராமரிடம் முறையிட்டு, எப்படி ஒரு சூத்திரன் நேராக கடவுளை தொழ முடியும் ,எங்களை தானே தொழ வேண்டும் என்று கூற, ராமர் வந்து அவனை கொலை செய்கிறான்.

நேரு வே சொல்லி இருக்கிறார் the discovery of india என்ற நூலில் , ராமாயணம் என்பது தென் இந்திய மக்களை இழிவு செய்ய எழுதிய நூல் என்று

மகாபாரதம்
நாரதர் கிருஷ்ணரை பார்க்க வருகிறார். அப்போது கிருஷ்ணன் கதவை பூட்டி வழிபட்டு கொண்டு இருகின்றார் . நாரதர் வியப்புடன் சர்வ சக்தி கொண்ட எம்பெருமானே வழிபடும் கடவுள் யார் என்று ஆவலுடன் பார்க்க , அங்கு ஒரு பிராமண சிலை உள்ளது. அதன் முன் கிருஷ்ணன் அமர்ந்து இருக்கிறார். இதன் பொருள் என்ன?

நான் சமூகத்தில் உயர்ந்தவன் என்று , கடவுளின் பெயரால் சொல்லும் போது, அங்கு மறு பேச்சே கிடையாது. ஆகா ராமனே சொல்லிவிட்டான் , கிருஷ்ணனே சொல்லிவிட்டான், என்று நம்பி விட்டனர்.

இனி கோவில் பூசாரியே , கோவிலுக்குள் வர வேண்டாம் என்றாலும், நம்மவன் கேட்க மாட்டான்.

இங்கு உருவாக்கப்பட்ட அனைத்து கடவுள்களின் கதைகளும் ஓன்று ஆபாசமாக இருக்கும், இல்லை திராவிடர்களுக்கு எதிரானதாக இருக்கும்.

இப்படியாக இருக்கையில் , ஒரு இம்மி அளவு கூட சிந்தனை இல்லாமல் , பழைய புராணபுளுகுகளை நம்பி , தன் நேரம் ,பொருள் என மக்கள் செலவு செய்தும், நேர்த்தி கடன் என்ற பெயரில் தங்கள் உடலை வருத்தியும் , சிறுதும் மானமற்றவர்களாக வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.

அன்று நாம் அசுரன், அரக்கன்,இன்று நாம் அகதி, என்று நாம் தமிழனாக வாழப்போகிறோம்?

.சீனிவாசன்.

4 comments:

  1. அந்தகாசூரனுக்கு வரம் கொடுத்தது ப்ரம்மன்,புராணம் தெரிந்து பதிவிடுங்கல்

    ReplyDelete
  2. அசூன் என்றால் தீயவர்கள்,

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இது போன்ற கேள்வியை பிற மதத்தினரையும் பார்த்து கேளுங்கள்

      Delete