Thursday, April 9, 2009

பங்குனி உத்திரம் என்றால் என்ன?

பங்குனி உத்திரம் கொண்டாடி முடிந்து விட்டது. முடிந்த வரை அலகு குத்தியும், காவடி எடுத்தும் மானத்தை வாங்கி விட்டார்கள். கொண்டாடிய யாரும் விழாவிற்கான காரணத்தை ஆராய்வதில்லை. காரணம் சிந்திப்பதில்லை. சிந்திக்க மதமும், பார்பனரும் விடுவதில்லை.

பங்குனி உத்திரம் என்றால் என்ன? சிவனுக்கும் ,பார்வதிக்கும் திருமணம் நடந்த நாள், முருகன்,தெய்வானைக்கு திருமணம் நடந்த நாள்.ஐயப்பன் பிறந்த நாள். அதாவது சிவன்,முருகன்,அய்யப்பன் ஆகிய மூவரயும் வணங்க உகந்த நாளாம்.

சிவனுக்கும், பார்வதிக்கும் பல திருமணங்கள் நடந்துள்ளன. சிவன் பார்வதியை பல உருவங்களில் பிறக்கச் செய்வாராம் - பிறகு மணந்து கொள்வாராம். அதனால்தான் சிவன் திருமணம் என்று பக்தர்கள் சொல்லமாட்டார்கள். பார்வதி கல்யாணம் என்றுதான் கூறுவார்கள். கதைப்படி சிவன்,பார்வதி இவர்களுடைய திருமணம் இமயமலையில் நடப்பதாக இருக்கிறது. அனைவரும் அங்கு கூடிவிட்டார்கள்.அதனால் பூமி பாரம் தாங்காமல் வடக்கு திசையில் தாழ்ந்து போய்விட்டது.உடனே சிவனின் சமயோஜிதப்புத்தி வேலை செய்ய தொடங்கி ஒரு முடிவுக்கு வந்தார்.அது என்ன வென்றால் அகத்தியனை அனுப்புவது.அகத்தியன் என்ன பண்ணினான் தெற்கே வந்து நின்று விட்டான் .உடனே பூமி சமநிலைக்கு வந்துவிட்டது. இதுதான் பங்குனி திருவிழா. கொஞ்சமாவது அறிவிற்கு பொருந்துகிறதா இந்த கதை. அகத்தியன் என்பவன் இரண்டடி குள்ளன். அவன் நிற்க பூமி அமுங்குமா?
முதலில் அகத்தியன் என்பவன் யார்?
பார்வதிக்கும் ,சிவனுக்கும் கல்யாணம் நடக்கிறது.பிரம்மா தான் புரோகிதன்.பிரம்மா விவாக ஓமம் செய்கிறான்.பார்வதி ஓமகுண்டத்தை பிரதட்சணம் வருகையில் இடது கையால் முந்தானையை தூக்கி பிடித்து கொண்டு வந்தாள்.அப்படி வருகையில் அவளுடைய தொடை பிரம்மா கண்களுக்குப்பட்டது.அதை பார்த்த பிரம்மா மோகித்ததால் இந்திரியம் ஸ்கலிதமாய்ற்று.உடனே பிரம்மா என்ன பண்ணினார் அதை ஓமகுண்டலத்தை சுற்றியிருக்கும் கலசத்தில் விட்டார்.அந்த கலசத்திற்கும் பிரம்மாவிற்கும் பிறந்தவன் இந்த அகத்தியன்.

அப்ப கதை எழுதி வைத்தவனுக்கு பூமி தட்டை என்று தான் தெரியும். இப்போது இந்த விழாவை கொண்டாடும் நம் மக்களுக்கு உருண்டை என்று தெரியாதா?


நன்றி- தமிழ் ஒவியா .

1 comment:

  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete