Sunday, April 12, 2009

வாஞ்சி நாதன் தியாகியா?

7.6.1911 அன்று வாஞ்சி நாதன் ஆஷ் துரையை சுட்டுகொன்ற பொது அவனுக்கே தெரியாது நமக்கு இப்படி தியாகி என்ற பட்டம் கிடைக்கும் என்று.

அப்போது சனாதன தர்மம் என்று ஓன்று இருந்தது.(இன்றும் இருக்கிறது). அதாவது நாள் வகை வர்ணம். மக்களை அவர்கள் பிறப்பின் மூலம் வகைபடுத்துவது. ஆங்கில துரையான ஆஷ் இதை கடுமையாகவே எதிர்த்து வந்தார். மக்களுக்கு சம உரிமையை அளிக்க பல மாற்றங்களை செய்தவர். அப்போதெல்லாம் குற்றாலத்தில் கடவுள் சிலையும், பார்பனர்களுமே குளிக்க சட்டம் இருந்தது. அதை உடைத்தெறிந்து அனைத்து பிரிவினரையும் அருவியில் குளிக்க வைத்தவர். இது உயர் சாதியினருக்கு சற்றே வெறுப்பை ஏற்படுத்தியது. மேலும் ஒரு நிகழ்வு அவர்களை வெறுப்பின் உட்சத்திற்கே இட்டு சென்றது. அது ...........

அது ஒரு மழைக் கால இரவு, ஆஷ் என்னும் வெள்ளை துரையின் குதிரை பூட்டிய வண்டி, சேரியைக் கடந்து பறக்கிறது. ஆஷ் ஒரு மனித நேயம் மிகுந்த மனிதன் என்பதால், இருள் விலகி கொஞ்சம் அவனுக்கு வழி விடுகிறது, மனிதர்களில் இருந்து விலக்கப்பட்டு மிருகங்களின் நிலையில் இருந்த ” தலித்” மக்களின் பகுதியை கடந்து ஆஷ் செல்லுகின்ற போது, அங்கே ஒரு அழுகுரல் இருளின் அமைதியை விலக்கி வருகிறது, ஆஷ் தன் சாரதியிடம் சொல்கிறான், வண்டியை அந்த அழுகுரல் வரும் திசை நோக்கி செலுத்து என்று, சாரதி சொல்கிறான், அது தாழ்த்தப் பட்ட மனிதர்கள் வாழும் இடம், அங்கு நாம் செல்லக் கூடாது என்று, ஆஷ், கேட்கிறான், மனிதர்களில் தாழ்ந்தவர்களா, அவர்கள், திருடும் இனமா? என்றான்? இல்லை அய்யா பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்றான்? வியப்பின் எல்லைக்கு சென்ற ஆஷ், கட்டளை இடுகிறான், ” அந்த அழுகுரல் வரும் திசை நோக்கிச் செல்” - அதிகாரத் தோணி கேட்டு அடங்கிய சாரதி, மறுக்காமல் விரைகிறான். அவர்கள் சென்ற இடம், அந்த மனிதர்களைப் போலவே இற்றுப் போன ஒரு குடிசை, அங்கே, ஒரு மகவினைப் பெற்றெடுக்கும், வலி வேதனையில் ஒரு பெண் கதறுகிறாள், சுற்றிலும் நான்கைந்து பெண்களும் , தூரத்தில் சில ஆண்களும், ஆஷ் அருகில் சென்று கேட்கிறான், என்ன ஆனது என்று? பிரசவ வேதனையில் இருக்கும் இந்தத் பெண்ணுக்கு, ஒரு சிக்கல், அவளை மருத்துவமனை கொண்டு சென்றால், இரண்டு உயிர்களை காப்பாற்றலாம் என்று…….அவர்கள் சொன்னவுடன், ஆஷ் கேட்கிறான், பிறகென்ன கொண்டு செல்ல வேண்டியது தானே என்று, அதற்கு, அவர்களில் ஒருவன் சொன்னான், அய்யா, அக்ரகாரம் கடந்து இந்த இருளில் செல்வது என்பது, எம்மை நாங்களே அழித்துக் கொள்வது போலாகும், வண்டி கட்டிச் செல்ல வேண்டும் என்றால், அக்ரகாரம் கடக்க வேண்டும், ஆனால், அது இயலாத் காரியம், அந்தப் பகுதிகளுக்கு நாங்கள் செல்லத் தடை செய்யப் பட்டு இருக்கிறோம். ஆஷ், அந்தப் பெண்களை பார்த்துச் சொல்கிறான், ” இந்த ஜில்லா அதிகாரி சொல்கிறேன், உடன், என்னுடைய வண்டியில் அந்தப் பெண்ணை ஏற்றுங்கள், நான் அவளை மருத்துவமனை அழைத்துச் செல்கிறேன், சொன்னது போல் செய்தான், ஆஷ்.

அக்ரகாரத்தை ஒரு தலித் பெண் கடந்து விட்டால் என்ற செய்தி அப்போது ஒரு தலைப்புச் செய்தி, வாஞ்சிநாதன் ஒரு மேல்தட்டுத் தீவிர வாதி, எப்பாடு பட்டாவது வர்ணங்களையும், குல தர்மங்களையும் காப்பாற்ற முயலும் ஒரு குலக் கொழுந்து.

அக்ரகாரத்தின், புனிதம் கெடுத்த ஆஷ் துரையின் ஆயுளுக்கு அன்று தான் முடிவு கட்டப் பட்டது நண்பர்களே, மணியாச்சியின் புகை வண்டி நிலையத்தில் வைத்து.
ஆஷ் துரையின் இறுதி கடிதம்

``ஆங்கிலச் சத்ருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத `சனாதன தருமத்தை காலால் மிதித்துத் துவம்சம் செய்து வரு கிறார்கள். ஒவ்வோர் இந்தி யனும் தற்காலத்தில் தேச சத்ரு வாகிய ஆங்கிலேயரை துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத் தையும் நிலைநாட்ட முயற் சித்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜுனன் முதலியவர்கள் இருந்து வந்த தேசத்தில் கேவலம் கோமா மிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்ச மனை முடி சூட்ட உத்தேசம் கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் கால் வைத்த உடனேயே அவனைக் கொல் லும் பொருட்டு, 3000 மத ராஸிகள் பிரத்தியக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ் தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை -
இப்படிக்கு ஆர். வாஞ்சி அய்யர்.

இக்கடிதம் வாஞ்சி நாதன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்த போது அவருடைய சட்டைப் பையில் இருந்ததாக அறியப் படுகிறது.

- சுடர் தென்னரசு கரூர் (`தினமணி 26.5.2008 பக்கம் 6)

ஆக தீண்டாமையை எதிர்த்த ஆஷ் துறைக்கு நாங்கள் கொடுக்கிறோம் தியாகி பட்டம்.

நன்றி :- கீற்று வலைப்பக்கம்

No comments:

Post a Comment