Saturday, April 25, 2009

பேய் பிடித்தல்,சாமியாடுதல் உண்மையா?


எதார்த்தமாக இன்று அந்த நிகழ்ச்சியை பார்க்க நேரிட்டது. இன்னும் இது போன்ற நிகழ்வுகள் அதுவும் தமிழகத்தின் தலை நகரத்திலே நடை பெறுவதை கண்டு சற்று யோசிப்பார்த்தால் , நாம் அறிவியலுக்கு எட்டாத தூரத்தில் தான் உள்ளோம் என்று எனக்கு என்ன தோன்றியது.


ஒரு வாலிபன் சற்றே சோர்ந்த நிலையில் அமர்ந்து இருக்கிறான். அவன் அருகில் ஒரு வயதான பெண் கையில் சூலாயிதமும் , வேப்பிலையும் வைத்து நின்று கொண்டு இருந்தார். அவர்களை சுற்றி கூட்டம்.என்ன நடக்கிறது என்று சற்று நின்று பார்க்க எண்ணினேன். அந்த பெண்மணி ,அந்த வாலிபனின் தலை மயிரை பிடித்து , ஆட்டிக்கொண்டு இருந்தார். நீ யார்? என்ன வேண்டும் உனக்கு என்று மிரட்டி கேட்டு, சூலாயிதத்தில் குத்தி கொண்டும் இருந்தார். அந்த வாலிபன் ஏதோ உளறி கொண்டு இருந்தான். எனக்கு புரிந்து விட்டது. அவர்கள் பேய் ஓட்டுகிறார்கள் என்று.


அவர்களுக்கு வேண்டிய பதிலை(எதிர்பார்க்கும்), அவனை குத்தி , குத்தி வாங்கி கொண்டு இருந்தனர். உதாரணமாக நீ பேய் தானே என்று இரண்டு முறை குத்தி கேட்டால், அவனும் வலி தாங்காமல், ஆமாம் என்றான். நீ செத்து போன சுமதி தானே என்றால், அமைதியாக இருக்கிறான், மீண்டும் குத்துகிறார்கள், ஆமாம் என்கிறான்.அவன் இல்லை என்றாலும், ஆமாம் என்கிறவரை அடிப்பார்கள். ஒரு கட்டத்தில் வலி தாங்காமல் ஒத்து கொள்கிறான்.


அந்த பேய் ஓட்டும் பெண்மணியை , ஏதோ பெரிய அறிவியல் மேதை போல , சுற்றி நிற்பவர்கள் பார்த்து கொண்டும், அவள் கேட்கும் கற்பூரம், வேப்பிலை மற்றும் பேய் ஓட்டும் உபகரணங்களை ,கொடுத்து கொண்டும் இருந்தனர். இது போன்ற மக்களின் அறியாமையை சிலர் பயன்படுத்தி பணம் சம்பாதித்து கொண்டுதான் இருக்கின்றனர்.


இது ஒரு மனோ ரீதியான நோய் , என்று எனக்கு என்ன தோன்றியது. அவன் ஆழ்மனதில் ஏற்ப்பட்ட ஏதோ பிரச்சினையின் நிகழ்வு என்பதை என்னால் உணர முடிந்தது. என் சூழ்நிலை காரணமாக அவர்களுக்கு , என்னால் விளக்க இயலவில்லை.விளக்க முற்பட்டு இருந்தால், எனக்கும் பேய் ஒட்டி இருப்பார்கள் , கூடியிருந்த கூட்டம் அப்படி.பின் நான் மன வருத்தத்துடன் அங்கிருந்து செல்ல நேரிட்டது.


நான் வலையை அலசியதில் எனக்கு கிடைத்த தகவல்களை பதிவு செய்கிறேன்.


(பேய் பிடிப்பதும், சாமி ஆடுவதும் ஒன்றோடொன்று தொடர்புடையதே. இவையெல்லாம் படிப்பறிவில்லாத பழைய கிராமங்களில் நடைமுறையிலிருந்த வழக்கங்கள். தற்போது இந்த வழக்கங்கள் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. இருப்பினும் ஒரு சிலரிடம் இந்த வழக்கம் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஒரு சிலருக்கு உள் மனத்தில் மற்றவர்களது கவனத்தைக் கவர வேண்டுமென்கிற ஒரு ஆசை இருக்கும். இதனை டிப்ரசிவ் சைக்கோசிஸ் (Depressive psychosis) என்று சொல்வார்கள். மேலும் பெண்களுக்கு சமுதாயக் கட்டுப்பாடுகளால், உள் மனதில் சில அடக்கி வைக்கப்பட்ட ஆசைகள் இருக்கும். இவையே பின்னர் அடக்க இயலாமல் வெளிக் கிளம்பும் போது ஹிஸ்டீரியா எனும் நோயாக மாறுகிறது. இந்த நோயுடையவர்கள்தான் பேய் பிடிப்பதும், சாமி ஆடுவதும் போன்ற செயல்களில் இறங்குகின்றனர். இதனை மருத்துவ ரீதியாக, நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை செய்து குணப்படுத்தலாம். மனத்தில் உள்ள எண்ணங்களைச் சிதற விடாமல் ஒருநிலைப் படுத்துவதன் மூலம் குணப்படுத்தலாம். இதற்குஹெட்டிரோசஜன்’ (Hetrosuggestion) என்று பெயர். இதற்கு தகுந்த மனநல மருத்துவர்கள் ஆலோசனையுடன் பென்டதால் சோடியம் (Pentathol Sodium) , ஈதர் (Ether) ஆகிய மருந்துகளை எடுத்து உள் மன உணர்வுகளை அறிந்து எண்ணங்களை ஒருநிலைப் படுத்தலாம். இந்த நோய் பெரும்பாலும் மத உணர்வு மற்றும் கடவுள் நம்பிக்கை அதிகமுடையவர்களுக்குத்தான் வருகிறது.)


.சீனிவாசன்.

2 comments:

  1. erumpa kanda pei payapadum arukil varadu yanparkel eppodu erumpu ellada edama ella ennum peiya

    ReplyDelete
  2. Gambling with Blackjack and the Gambling with Casinos
    Explore 계룡 출장안마 mapyro's directory and compare 공주 출장샵 gambling with casinos offering Blackjack and 계룡 출장마사지 slots in Washington, 광주 출장마사지 D.C. Get information, 정읍 출장안마 tips and reviews

    ReplyDelete