Tuesday, April 28, 2009

இந்து மதத்தை ஏன் வெறுக்கிறேன்.?

மனிதனாய் பிறந்த யாரும் மதம் சார்ந்து வாழ்வார்கள் ஆனால், அவர்கள் பிற்போக்கு வாதிகள்தான்.எல்லா மதங்களும், என்னை அப்படியே நம்பு,கேள்விகேட்காதே என்று கூறி, மடத்தனத்தில் ஆழ்த்துகிறது. ஆனால் இந்து மதம் மட்டும்தான் மடத்தனத்தோடு, தீண்டாமையையும் சொல்கிறது.

பிரம்மாவின் தலையில் பிறந்தவன் பிராமிணன், தோளில் பிறந்தவன் சத்ரியன், வயிற்றில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன் ,என்ற வர்ணகோட்பாடு இந்து மதத்தில் தான் இருக்கிறது. இதை கிருஷ்ணனும் பகவத்கீதையில் அர்ச்சுனனிடம் போதனை செய்திருக்கிறார். ராமரும் ராமாயணத்தில், சம்பூகன் என்ற சூத்திரனை , வேள்வி செய்ததற்காக கொலைசெய்கிறான். மகாபாரதத்தில் ஏகலைவன் என்ற வேடன், வில் வித்தை கற்றுகொண்டானே , என்று துரோணர் கோபப்பட்டு, அவன் கட்டை விரலை காவுவாங்குகிறார்.

புராண, இதிகாச ஆதாரப்படி, கடவுளின் பெயரால் தான்,இங்கு சாதி தோற்றுவிக்கப்பட்டது என்பது, நிதர்சனமான உண்மை.

இந்து மத கடவுள்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சொந்தகாரர்கள் தான். ஆகசாதி ஒழிப்பை விரும்பும் ஒருவன் எவன் ஆயினும், சாதியை உண்டாக்கிய இந்த கடவுள்களை நம்பி வழிபட மாட்டான். அந்த கடவுள் சார்ந்த மதத்திலேயும் இருக்க மாட்டான்.

இல்லை சாதி ஒழிப்பை ஏற்று கொள்கிறேன், ஆனால் கடவுள் ஒழிப்பை ஏற்றுகொள்ள முடியாது என்று ஒருவன் கூறுவான் ஆயின், அவன் எவ்வளவு படித்தவன் ஆயினும்,உயர்ந்த பதவியில் இருந்தாலும்,அந்த கடவுள் கூறியபடி கீழ்சாதி மகனே ஆகிறான், என்பது மறுக்க முடியாத உண்மை.

சாதியை தோற்றுவித்த கடவுளை வழிபடும் வரை, சாதி ஒழிப்பு என்பது நம்மைநாம் ஏமாற்றும் வேலையே......

சுவாசிப்பவர் எல்லாம் மனிதர் அல்லர்;
சுயசிந்தனை செய்பவரே மனிதர்.

.சீனிவாசன்.
,

1 comment:

  1. naan kadavulai (kadavul entra maayaiyai) thooki erikiren.

    P.Subash

    ReplyDelete